தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் இயக்குனர் சீனு ராமசாமியால் தமிழ் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் என்.ஆர்.ரகுநந்தன். முதல் படத்திலேயே ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ என்கிற வைரமுத்துவின் வைர வரிகளை அருமையான பாடலாக்கி அதற்கு தேசியவிருதும் பெற்றுத்தந்தவர். தொடர்ந்து சுந்தரபாண்டியன், நீர்ப்பறவை, மஞ்சப்பை, மாப்பிள்ளை சிங்கம் என அடுத்தடுத்த படங்களின் ஹிட் பாடல்களால் தனக்கான ஒரு நிலையான இடத்தை தமிழ்சினிமாவில் பிடித்துள்ளவர்.. இன்றும் தென்மாவட்டங்களில் எந்த வீட்டில் விஷேசம் என்றாலும்…